திருச்சியில் திரும்பிய இடங்களில் எல்லாம் எம்.பி அருண் நேருவின் வாழ்த்து போஸ்டர்கள்
திருச்சி 11.12.2025
திருச்சியில் திரும்பிய இடங்களில் எல்லாம் அருண் நேருவின் வாழ்த்து போஸ்டர்கள்

டிசம்பர் 12-ம் தேதி (நாளை) பிறந்த நாள் காணும் திமுக எம்.பி அருண் நேருக்கு திருச்சி மாநகர் முழுவதும் போஸ்டர்கள் மற்றும் கட்டவுட் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

திமுக கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என் நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான அருண் நேருவின் பிறந்தநாள் நாளை டிசம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக திருச்சி முழுக்க பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

திருச்சியின் இதயத்துடிப்பே, எங்களின் எதிர்காலமே, மன்னவரின் மாணிக்கமே, கர்ஜிக்கும் குரலே, திராவிட தொடர்ச்சியே என்றெல்லாம் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டு திருச்சியில் திரும்பிய இடங்களில் எல்லாம் அருண் நேருவின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டு திருச்சி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

நாளை எம்.பி அருண் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அன்னதானம் நலத்திட்ட உதவிகள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
