Trending News Tamil News Website In Trichy

திருச்சி கோர்ட்யார்ட் பை மேரியட்: பாரம்பரிய கேக் மிக்ஸிங் விழாவில் வெளிநாட்டினர் உற்சாகக் கொண்டாட்டம்

0

திருச்சி 14.11.2026

*திருச்சி தனியார் (கோர்ட்யார்ட் பை மேரியட்) ஹோட்டலில் கேக் மிக்ஸிங் விழா கோலாகலம் – வெளி நாட்டினர் கலந்துகொண்டு கேக் மிக்சிங் செய்து ஆடி பாடி மகிழ்ந்தனர்*

திருச்சி கோர்ட்யார்ட் பை மேரியட் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய கேக் மிக்ஸிங் விழா கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், ஹோட்டல் ஊழியர்களுடன் இணைந்து உற்சாகமாக கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, உலர் திராட்சை, செர்ரி, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை பெரிய பாத்திரத்தில் கொட்டி கலந்தனர். பின்னர் ஒயின் , மசாலா பொருட்கள் மற்றும் சிறப்பு சாறுகள் சேர்க்கப்பட்டு கிறிஸ்துமஸ் கேக்கிற்கான கலவை தயார் செய்யப்பட்டது.

இந்த கலவை அடுத்த சில வாரங்களுக்கு ஊற வைக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சுவையான கேக்குகளாக விருந்தினர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

விழாவில் கிறிஸ்துமஸ் பாடல்கள் ஒலிக்க, வெளிநாட்டினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆடல், பாடலுடன் உற்சாகமாக கலந்து கொண்டு விழாவை களைகட்ட செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.