Trending News Tamil News Website In Trichy

11 ஆண்டுக் கோரிக்கை- சேவை கட்டண உயர்வு மற்றும் நலவாரியம் வழங்கப்படுமா? – இ-சேவை மைய உரிமையாளர்களின் எதிர்பார்ப்பு

0

திருச்சி 25.10.2026

தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர் சங்கத்தின் சிறப்பு கூட்டமும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டமும் திருச்சி தெப்பக்குளம் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் இன்று மாநில தலைவர் மூர்த்தி தலைமையில் செயலாளர் சேவியர் முன்னிலையில் இன்று நடைபெற்றது, இதில் தமிழகம் முழுவதும் இருந்து இ-சேவை மைய உரிமையாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்

தமிழகம் முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட இ சேவை மைய உரிமையாளர்கள் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர், அரசு வழங்கும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இ சேவை மையங்களை தொடர்ச்சியாக நடத்திவருவதாகவும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை சிஇஓ பிரியங்கா ஐஏஎஸ் மற்றும் தமிழக அமைச்சர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்திருப்பதாகவும், சிஎஸ்சி எனப்படும் டிஜிட்டல் சேவா தளத்தில் இ சேவை வழங்குவதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால், ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கான இ சேவை ஐடி செயல்படாமல் இருப்பதால், தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அவர்களுக்கு இ சேவை வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்

விலைவாசி, வாடகை உயர்வு மற்றும் பணியாளர்களுக்கான சம்பளஉயர்வை கருத்தில் கொண்டு, கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாமல் உள்ள சேவை கட்டணங்களை தமிழக அரசு உயர்த்தவேண்டும் மேலும் மின் கட்டண மானியத்தையும் இ சேவை மையங்களுக்கு வழங்கிட வேண்டும், இ சேவை மைய உரிமையாளர்களுக்கு என தனி நலவாரியம் ஏற்படுத்தித் தர வேண்டும், இதுமட்டுமன்றி குடும்பஅட்டை தொடர்பான சேவைகளான புகைப்படம் மாற்றுதல் பெயர் திருத்தம் ஸ்மார்ட் கார்டு அச்சிடுதல் போன்ற சேவைகள் இ சேவை மையங்கள் மூலம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் மற்றும் பிறப்புச் சான்றிதழ் திருத்தங்களை ஆன்லைன் விண்ணப்ப வசதி வழங்க வேண்டும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யவும், ஆதார் விவரங்களை திருத்தவும், ஆதார் பெயர் திருத்தங்களை மற்றும் பயோமெட்ரிக் புதுப்பிக்கும் சேவையை மேற்கொள்ள அனுமதி வழங்கவேண்டும் மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மயமாக்க வேண்டும் அதன்மூலம் இ சேவை மைய உரிமையாளர்கள் பயன்பெறுவாளர்கள் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்

இணையதளத்தில் 6000 ரூபாய் மற்றும் பத்தாயிரம் ரூபாய்க்கு புதிதாக இ-சேவை மையம் பயிற்சி என்ற பெயரில் போலி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்தப் போலி கும்பல் குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் இவர்களால் அரசின் இ சேவை மைய ஐடி வழங்க முடியாத நிலையில், இ சேவை மையங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.