திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் ரூ.45,000 ரொக்கம் மற்றும் செல்போன் திருட்டு- ஒருவர் கைது
திருச்சி 24.10.2026
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் ரூ.45,000 ரொக்கம் மற்றும் செல்போன் திருட்டு- ஒருவர் கைது.
கடந்த 18-ம் தேதி அன்று கோவையைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் தனது சொந்த ஊரான காளையார் கோவிலுக்குச் சென்றுவிட்டு திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்து நடைமேடை எண் 6-ல் தூங்கியுள்ளார். பின்னர் 19-ம் தேதி அன்று காலை சுமார் 8 மணியளவில் அவர் கண் முழித்து பார்த்த போது அவரது பேன்ட் பாக்கெட்டிலிருந்த செல்போன் மற்றும் ரூ.45,000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஈ.புதூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் மூலம், லால்குடியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் மற்றொருவர் திருட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை திருடப்பட்ட பணத்திலிருந்து ரூ.500 மீட்கப்பட்டவுடன் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
