Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: கோட்ட மேலாளர் பாலக்ராம் நெகி துவக்கி வைத்தார்

0

திருச்சி 10.10.2026

திருச்சி ரெயில்வே நிர்வாகம் சார்பில்- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் – திருச்சி ரெயில்வே கோட்ட டி.ஆர்.எம் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் பசுமை பரப்பை விரிவுபடுத்தும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடும் “பிளான்ட் ஏ பில்லியன் ” அமைப்பு சார்பில் ஸ்வச்சுதா பக்வாடா என்ற தலைப்பின் கீழ் தூய்மைப் பணியுடன் இணைந்து திருச்சி ரெயில்வே கோட்டத்தில் ரெயில்வே துறைக்கு சொந்தமான வளாகங்களில் 1.25 லட்சம் மறக்க நடும் திட்டம் இன்று துவங்கியது. இத்திட்டத்தினை திருச்சி கோட்ட மண்டல மேலாளர் பாலக்ராம் நெகி மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருச்சியில் மட்டும் 300 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு உள்ளனர் –
இந்நிகழ்வில் தேசிய கல்லூரியின் சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு மரங்களை நட்டனர்.

இத்திட்டத்தினை அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், கார்பெட் நிறுவனங்கள், பள்ளிகள்,கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து அவர்களின் பங்களிப்போடு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ரெயில்வே கோட்டத்தை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.