Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு- கவரிங் நகை எனத் தெரிந்ததும் ரோட்டில் வீசிவிட்டு தப்பிய திருடன்

0

திருச்சி 10.10.2026

திருச்சியில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு- கவரிங் நகை எனத் தெரிந்ததும் ரோட்டில் வீசிவிட்டு தப்பிய திருடன்

திருச்சி திருவானைக்காவல் ராகவேந்திரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா இவர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து மளிகை கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென கவிதாவை வழிமறித்து, அவர் கழுத்தில் கிடந்த செயினைப் பறித்துக்கொண்டு தப்பியோடினார். திடீர் திருட்டுச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கவிதா கூச்சலிட்டார்.

இதனிடையே, சிறிது தூரம் ஓடிய அந்த வாலிபர், தான் பறித்தது தங்கம் அல்ல அது கவரிங் செயின் என்பதைத் தாமதமாக உணர்ந்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் அந்த கவரிங் செயினை அதே பகுதியில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்த நிலையில், ஹெல்மெட் அணிந்து வந்து கைவரிசை காட்டிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.