Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் DYFI – SFI பேரணி- காவல்துறையுடன் கடும் வாக்குவாதம்… தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

0

திருச்சி 9.10.2026

*தேர்தல் ஆணையரைக் கைது செய்ய வலியுறுத்தல்- திருச்சியில் DYFI, SFI தோழர்கள் பேரணி- காவல்துறையினருடன் வாக்குவாதம்*

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைக் கைது செய்ய வலியுறுத்தியும், அவரை உடனடியாகப் பதவி விலகக் கோரியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருச்சியில் கண்டனப் பேரணி நடைபெற்றது.

DYFI திருச்சி மாநகர் மாவட்டக் குழு மற்றும் SFI சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் பேரணிக்கு, DYFI மாவட்டச் செயலாளர் சேதுபதி தலைமை தாங்கினார். திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி, ஒன்றிய அரசைக் கண்டித்தும், தேர்தல் ஆணையருக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சிங்காரத்தோப்பில் உள்ள BSNL அலுவலகத்தை நோக்கிச் சென்றது.

பேரணி சிங்காரத்தோப்பு பகுதியை அடைந்தபோது, திருச்சி மாவட்ட காவல் உதவி ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் காவல்துறைக்கும், பேரணியில் ஈடுபட்ட மாணவர் சங்கத் தோழர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், பேரணி நிறைவு செய்யப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் DYFI மாவட்டத் தலைவர் சந்தோஷ், SFI மாவட்டச் செயலாளர் சூர்யா, ஆமோஸ், மாவட்டத் தலைவர் வைரவளவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், 50-க்கும் மேற்பட்ட தோழர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.