Trending News Tamil News Website In Trichy

காசநோய் விழிப்புணர்வு பேரணி-திருச்சியில் மாணவ-மாணவிகள் பங்கேற்பு

0

திருச்சி – 08.10.26

*தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பாக திருச்சியில் நடந்த காசநோய் விழிப்புணர்வு பேரணி*

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக காசநோய் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவ கழக காச நோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர்.முத்துப்பாண்டியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணையானது திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கி கலெக்டர் சாலை ரோடு வழியாக பெஸ்டி பள்ளி ரவுண்டானா அருகே நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ், என்.சி.சி. மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில் காச நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை எடுத்துச் சென்று சாலையில் செல்லும் பொது மக்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தினர்.

இந்த காசநோய் விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மருத்துவ கழக காச நோய் பிரிவு இரண்டாம் நிலை மருத்துவ அதிகாரி டாக்டர் மதிவதனி, மை பாரத் வாலண்டியர்ஸ் சார்பாக மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா என்சிசி கமாண்டோ அதிகாரி நீரஜ் உனியல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.