திருச்சியில் ஆட்டோ மெக்கானிக் கொலை – போதையில் தம்பியே அண்ணனை கொலை செய்த கொடூரம்
திருச்சி 23.09.2026
திருச்சியில் ஆட்டோ மெக்கானிக் கொலை – போதையில் தம்பியே அண்ணனை கொலை செய்த கொடூரம்
திருச்சி மாநகரம் தென்னூர் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் முஹம்மது பாரூக் (32). இவர் ஆட்டோ மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருக்கு அசார்(28) என்கிற சகோதரர் உள்ளார். அவர் மீன் கடையில் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் இன்று மாலை பாரூக், அசார் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.அவர்களின் தாய் நிஷா வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் பாருக் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அதைப் பார்த்து அவர் கதறி அழுதார் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.தகவல் அடிப்படையில் தில்லை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அரவிந்த் பனாவத், தில்லை நகர் உதவி ஆணையர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அண்ணன் தம்பி இருவருக்கும் போதைப் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக அசார் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. போதையில் இருவரும் அடிக்கடி சண்டை போடுவார்கள் எனவும் இருவரும் இன்று போதையில் இருந்த நிலையில் இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. அதில் அசார் வீட்டில் இருந்த கத்தியால் பாருக்கின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது தொடர்ந்து அசாரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது