Trending News Tamil News Website In Trichy

மண்ணச்சநல்லூரில் அலைமோதும் மக்கள் ஆதரவு- எம்.எல்.ஏ கதிரவனுக்கு வேல், செங்கோல் வழங்கி உற்சாக வரவேற்பு*

0

திருச்சி 20.04.2026

*மண்ணச்சநல்லூரில் அலைமோதும் மக்கள் ஆதரவு- எம்.எல்.ஏ கதிரவனுக்கு வேல், செங்கோல் வழங்கி உற்சாக வரவேற்பு*

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 18 வார்டுகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் மாபெரும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், பொதுமக்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, தொகுதி மக்கள் தங்கள் அன்பின் அடையாளமாக எம்.எல்.ஏ கதிரவனுக்கு வெற்றி வேல் மற்றும் செங்கோல் வழங்கி கௌரவித்தனர்.

பெண்களின் ஆரத்தி எடுப்பு மற்றும் இளைஞர்களின் உற்சாக முழக்கங்களால் தொகுதி முழுவதும் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.

இந்த பிரச்சாரத்தில்ஒன்றிய கழகச் செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள்திமுகவின் தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய நிர்வாகிகள், கடந்த ஐந்தாண்டுகளில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விப் பணிகளைப் பட்டியலிட்டனர். தமிழக அரசின் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, ‘மகளிர் உரிமைத் தொகை’ போன்ற சாதனைகளை முன்வைத்து, மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

மக்களின் இந்த அதீத வரவேற்பு, மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டதாக உடன்பிறப்புகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.