Trending News Tamil News Website In Trichy

*திருச்சியில் அதிரடி காட்டிய ‘குடமுருட்டி கரிகாலன்’ படை உற்சாக வரவேற்புக்கிடையே வேட்புமனு தாக்கல் செய்த விஜய்*

0

திருச்சி 2.04.2026

 

*திருச்சியில் அதிரடி காட்டிய ‘குடமுருட்டி கரிகாலன்’ படை உற்சாக வரவேற்புக்கிடையே வேட்புமனு தாக்கல் செய்த விஜய்*

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இன்று திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்காக இன்று திருச்சி விமான நிலையம் வருகை தந்த அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

 

குறிப்பாக திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன், மாவட்ட பொருளாளர் தர்கா சௌகத்,மலைக்கோட்டை பகுதி இணைச் செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ்,போட்டோ விமல், ஆகியோர் தலைமையில் திரளான தொண்டர்கள் மலர்த்துவியும், கோஷங்கள் எழுப்பியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

விமான நிலைய வரவேற்பைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை முறையாகத் தாக்கல் செய்தார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவது அந்தப் பகுதியில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.