திருச்சியில் 3 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்- டெங்கு அபாயத்திலும் நடவடிக்கை எடுக்காத திருச்சி மாநகராட்சி-வியாதி பரவினால் மாநகராட்சியே பொறுப்பு*
திருச்சி 21.09.2026
*திருச்சியில் 3 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்- டெங்கு அபாயத்திலும் நடவடிக்கை எடுக்காத திருச்சி மாநகராட்சி-வியாதி பரவினால் மாநகராட்சியே பொறுப்பு*
திருச்சி பாலக்கரை அருகே உள்ள அடைக்கல மாதா கோவில், கெம்ப்ஸ்டவுன் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கழிவுநீர் தெருவெங்கும் வழிந்தோடி வருவதால், அப்பகுதி மக்கள் கடுமையான சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகியுள்ளனர்.தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலேயே கழிவுநீர் ஓடுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் இந்த கழிவுநீரைத் தாண்டியே செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகாரளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் தெரிந்தும் மாநகராட்சி நிர்வாகம் இவ்வளவு அலட்சியமாக இருப்பது வேதனை அளிக்கிறது. நோய்களும் பாதிப்புகளும் தீவிரமடைந்த பிறகுதான் அதிகாரிகள் விழித்துக் கொள்வார்களா? உடனடியாக வழிந்தோடும் கழிவுநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.