திருச்சி ரயில் நிலையத்தில் 22 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்
திருச்சி 6.10.2026
திருச்சி ரயில் நிலையத்தில் 22 கிலோ குட்கா பறிமுதல்- ஓடும் ரயிலில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை
திருச்சி இருப்புப் பாதை காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா, IPS அவர்களின் உத்தரவின் பேரில், ரயில்வே காவல்துறையினர் ரயில்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் சிறப்பு ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (06/10/2026) முதல் நிலைக் காவலர் (517) கண்ணதாசன், காவலர்கள் (950) ரெங்கபாஷ்யம் மற்றும் (1560) ராஜ்குமார் அடங்கிய சிறப்பு ரோந்துப் படையினர், விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி வரை இயங்கும் நிஜாமுதீன் – கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12642) ரயிலில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் இரவு 21:20 மணியளவில் ரயில் திருச்சி ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 4-ஐ வந்தடைந்தபோது, ரயிலின் பின்புறம் அமைந்திருந்த பொதுப் பெட்டியில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, இருக்கையின் அடியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ஒரு சாக்குப்பையை எடுத்துச் பரிசோதித்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மொத்த எடை 22 கிலோ ஆகும். சம்பவ இடத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லாததால், கைப்பற்றப்பட்ட குட்கா மூட்டை திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.