திருச்சியில் கூகுள் மேப் உதவியுடன் கோயில்கள், வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது.
*திருச்சியில் கூகுள் மேப் உதவியுடன் கோயில்கள், வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது.*
*இருவருரிடமிருந்து ரூ 9 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகைகள் மீட்பு .*
திருச்சிமாவட்டம் ,
முசிறி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது.
கொள்ளை சம்பவங்கள் குறித்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில்,
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில்
முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆலோசனையின் பேரில் தா.பேட்டை காவல் ஆய்வாளர் அனந்த பத்மநாதன் தலைமையில்
தனிப்படை
அமைக்கப்பட்டு தீவிர
விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியைச் சேர்ந்த தமிழ் பாரதி (22) ,திருச்சியை சேர்ந்த சரவணன் (44) ஆகியோர் கூகுள் மேப் உதவியுடன் கிராமப்புற காட்டுப் பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் கோயில்களில் உள்ள நகைகள் குறித்து கண்டறிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டு
பிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதுவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும்
அவர்களிடமிருந்து
ரூ9 லட்சம் மதிப்பிலான 12 பவுன் தங்க நகைகள், இரண்டு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பாரதி அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு உட்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்பது கூடுதல் தகவல்.