Trending News Tamil News Website In Trichy

தவெக-வில் இருந்து விலகி திமுகவில் இணைந்த திருச்சி பொருளாளர்- “ரசிகராக ஏற்கலாம் , தலைவராக ஏற்க முடியாது”*

0

திருச்சி 23.12.2025

தவெக-வில் இருந்து விலகி திமுகவில் இணைந்த திருச்சி பொருளாளர்- “ரசிகராக ஏற்கலாம் , தலைவராக ஏற்க முடியாது”*

திமுகவின் வலுவான கட்டமைப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வார்டு எண் 29, அண்ணா நகர் பகுதி திமுக, திருச்சி மேற்கு மாநகரம், மத்திய மாவட்டம் சார்பில், பகுதிச் செயலாளர் கமால் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த பரப்பரை கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி பேசுகையில்.. தமிழ்நாட்டில் திமுகவின் திராவிட கொள்கையை அழித்துவிட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக மதத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள் .

ஆனால் இந்த மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என பேசினார் ..

இந்த கூட்டத்தில்… தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) திருச்சி அண்ணா நகர் பகுதி பொருளாளர், அக்கட்சியிலிருந்து விலகி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர்..

அவரை ஒரு நடிகராகவும், ரசிகனாகவும் இன்றும் எங்களுக்குப் பிடிக்கும். ஆனால், ஒரு தலைவராக அவரை எங்களால் பார்க்க முடியவில்லை.”

கட்சியின் கொள்கைகளும், தற்போதைய செயல்பாடுகளும் தெளிவாக இல்லை. எனவே மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் திமுக போன்ற ஒரு கொள்கை உள்ள பேரியக்கத்துடன் பணி செய்வோம் என பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.