திருச்சியை சேர்ந்த கவிஞர் நந்தலாலா மறைவு-அருண் நேரு எம்.பி நேரில் அஞ்சலி*
திருச்சி 5.03.2025
*திருச்சியை சேர்ந்த கவிஞர் நந்தலாலா மறைவு-அருண் நேரு எம்.பி நேரில் அஞ்சலி*
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது உடல் பெங்களூரில் இருந்து திருச்சி கருமண்டபம், விவேகானந்தர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை 2 மணி அளவில் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என் அருண் நேரு கவிஞர் நந்தலாலா இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், பகுதி செயலாளர் மோகன்தாஸ், மாமன்ற உறுப்பினர்கள் முத்து செல்வம், ராம்தாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா தேவி,மாவட்ட பிரதிநிதி மணிவண்ண பாரதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.