Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் எம்.பி.அருண் நேரு அவர்களுக்கு வாழ்த்து மழை: ட்ரெண்டிங்கில் அசத்தும் போஸ்டர்

0

திருச்சி எம்.பி. கே.என். அருண் நேரு அவர்களுக்கு வாழ்த்து மழை: ட்ரெண்டிங்கில் அசத்தும் போஸ்டர்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் எம்.பி அருண் நேரு அவர்களுக்கு நாளை பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள ஒரு கிரியேட்டிவ் போஸ்டர் திருச்சியில் பேசு பொருளாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி திருச்சி மண்டல பொறுப்பாளரும், சிறுகமணி பேரூராட்சி கவுன்சிலருமான A.K. அருண் என்பவர் இந்தப் போஸ்டரை வடிவமைத்து வெளியிட்டுள்ளார்.

திருச்சி சாஸ்திரி ரோடு, மெகா ஸ்டார் எதிரே வைக்கப்பட்டுள்ள இந்த பேனரில் கே.என். அருண் நேரு அவர்களின் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. விவேகம், வெற்றி, போராளி, அரசன், தலைவன், எழுச்சி, நேர்மை போன்ற குணாதிசயங்களையும் அவரது உழைப்பையும், செயல்பாட்டையும் குறிக்கும் வகையில் பேனரில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசமான, உணர்வுபூர்வமான மற்றும் கிரியேட்டிவ் ஆன பிறந்தநாள் வாழ்த்துப் போஸ்டர், திருச்சி திமுகவினரிடையேயும் பொதுமக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.