திருச்சி ஜேசிஐ ராக்டவுனின் 50ஆவது தலைவர் பதவி ஏற்பு விழா..!
ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் எனப்படும் ஜெ.சி.ஐ ராக்டவுன் இன் 50ஆவது பதவியேற்பு விழா திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் புதிய தலைவராக முனைவர் செபஸ்டின் சுதன் ராஜா பதவி ஏற்று கொண்டார் தொடர்ந்து ஜேசிஐ ராக்டவுன் நிர்வாகிகள் பதவியேற்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.
இந்த பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஜே.சி.ஐ இன் மண்டல தலைவர் அசோக் ராஜ் கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பேசும்போது ஜே.சி.ஐ கோட்பாடுகள் பற்றியும் ஜே.சி.ஐ-யால் நாம் எவ்வாறு பயன் பெறலாம் என்று புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இடையே ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல துணைத்தலைவர் ஜெஎப்எம் பொறியாளர் கஜேந்திரன் , பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்கத்துறை முதன்மையர் முனைவர் ஆனந்த் கிதியோன் , வணிக நிரவாகவியல் துறையின் இயக்குனர் முனைவர் பெட்ரிசியா ஜான்சி ராணி , வணிக நிர்வாகவியல் துறையின் ஒருங்கிணைப்பாளர்முனைவர் கிபிட்ஸன் மாத்யூ வின்சென்ட ஆகியோர் கலந்துகொண்டு ஜேசிஐ ராக்டவுன் தலைவரையும் நிர்வாகிகளையும் வாழ்த்தினார்.
முன்னதாக இந்த விழாவிற்கு வந்த அனைவரையும் ஜேசிஐ ராக்டவுன் முன்னாள் தலைவர் ஜே.சி.பிரசாத் வாழ்த்தி வரவேற்றார். ஜேசிஐ முனைவர் புஷ்பா ரெஜீனா நன்றியுரையாற்றினார்.