திருச்சி மத்திய,வடக்கு மாவட்ட தி.மு.க செயற்கு கூட்டம் அமைச்சர் கே. என். நேரு பங்கேற்பு..!
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் கழகத்தின் சார்பு அணிகளின் மாவட்ட,மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் பேரூர் தர்மலிங்கம்,அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன் ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரணிகுமார் உங்கிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் இந்தியாவே வியக்கும் வண்ணம் திராவிட மாடல் ஆட்சி செய்து அடிதட்டு மக்கள் முதல் அறிஞர்கள்வரை பாராட்டும் நெ.1 முதல்வர் கழக தலைவர் தளபதி அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்திலுள்ள மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி பேரூர், கிளைக்கழகங்கள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் பொதுக்கூட்டங்கள் நடத்தி மிகவும் சிறப்பாக நமது மாவட்டத்தில் கொண்டடுவது என தீர்மானிக்கப்பட்டது.
அன்னை தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிக்கும் வகையில் மும் மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழ் நாட்டிற்கு நிதி கிடையாது என அறிவித்த மோடி அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது என உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..