திருச்சி காட்டூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின் படி பொதுச்செயலாளர் என் .ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தெற்கு மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் கோடை வெயிலில் தாக்கத்தை தணிக்கும் வகையில் விஜய் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவானது காட்டூரில் அதன் பகுதி தலைவர் சந்துரு பாலாவின் சிறப்பான ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட நிர்வாகி அருள் விஜய் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு ஐஸ் மோர் ,நன்னாரி சர்பத், தர்பூசணி பழங்கள் ,ரோஸ் மில்க் , ஆகியவற்றை வழங்கினர். இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மூர்த்தி, பிரபா ,நாகேந்திரன், சாம், லோகநாதன், சகாயராஜ், என் எஸ் பி சுரேஷ், ஹோம்ஸ், மற்றும் தமிழக வெற்றிக்கழக அனைத்து நிர்வாகிகள் , மகளிர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.