திருச்சி 8.03.2025
*தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது*
கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்த நாள் கொண்டாட்டம் திமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி கெம்ஸ்டவுன் பகுதியில் உள்ள T.E.L.C நடுநிலைப் பள்ளியில் காஜாமலை பகுதி பொருளாளர் பாஸ்கர் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு, சீருடை மற்றும் இனிப்புகளை மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம்,மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி,மார்சிங்பேட்டை செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்