வனவிலங்குகளை கட்டுப்படுத்தும் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லை-துரைவைகோ!
வனவிலங்குகளை கட்டுப்படுத்தும் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லை என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
நேற்று (19.02.2025) நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டேன். சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அணுசக்தி துறை நிலைக்குழு கூட்டம் நேற்று (19.02.2025) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தில் நடைபெற்றது.
கோரிக்கை
அதில் கலந்துகொண்டு, இந்நிலை குழுவிற்கு உட்பட்ட துறைகள் தொடர்பான என் கேள்விகளை, பாராட்டுகளை, கோரிக்கைகளை வழங்கினேன். அதன் விபரம் பின்வருமாறு:-
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், சிமெண்ட் தொழிற்சாலைகளில் இருந்து ஏற்படும் மாசுகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், முழுமையாக கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் தேவை என்பதை நாம் அறிவோம். அதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய விதிமுறைகள் என்ன? எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று விவரம் தருமாறு கேட்டுக்கொண்டேன்.