திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தேசிய அளவிலான போதை ஒழிப்பு விழிப்புணர் குறும்பட போட்டி நடைபெற்றது – காணொளி காட்சி வாயிலாக மாணவர்களுக்கு ஊக்கமளித்த நடிகர் சூரி
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் துறை சார்பாக போதை ஒழிப்பு , சாலை பாதுகாப்பு , சைபர் கிரைம் , செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவைகளை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய குறும்பட போட்டி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா , கர்நாடக உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு குறும்படங்கள் சமர்ப்பித்தனர்
தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
இதில் முதல் பரிசு இருபது ஆயிரம், இரண்டாம் பரிசு பத்து ஆயிரம், மூன்றாம் பரிசு ஐந்து ஆயிரம் என வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது
இந்த குறும்பட போட்டி நிகழ்ச்சியில் விலங்கு பட இயக்குநர் பிரசாத் பாண்டியராஜன், சூரி வருவதாக இருந்தது ஆனால் மாமன் திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அவர்களால் வர முடியவில்லை இந்நிலையில் அவர்கள் காணொளி காட்சி மூலமாக மாணவர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய நடிகர் சூரி :
கல்லூரிக்கு நன்றி சொல்கிறேன் பல்வேறு அறிஞர்களை சமூகத்திற்கு தந்துள்ளது. இந்த கல்லூரி அதேபோல பிரசாந்தை பாண்டியராஜ்-ஐ கல்லூரி கொடுத்துள்ளது
மாமன் திரைப்படம் மூலமாக எனக்கு அடுத்த மைலேஜ் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன் அதற்குக் காரணம் இந்த கல்லூரி
மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் சமூகத்திற்கு முக்கியமான பங்களிப்பாக மீடியா உள்ளது எனவே நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு கொடுக்க வேண்டும் என கூறினார்