Trending News Tamil News Website In Trichy

ஜல்லிக்கட்டு ஆன்லைன் டோக்கன் முறைக்கு எதிர்ப்பு- திருச்சி ஆட்சியரிடம் வர்ணனையாளர்கள் சங்கம் மனு*

0

திருச்சி 12.01.2026

*ஜல்லிக்கட்டு ஆன்லைன் டோக்கன் முறைக்கு எதிர்ப்பு- திருச்சி ஆட்சியரிடம் வர்ணனையாளர்கள் சங்கம் மனு*

திருச்சி பெரிய சூரியூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் ஜனவரி 15-ஆம் தேதி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வர்ணனையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும். காளைகளுக்கு ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்குவதை விடுத்து, பாரம்பரிய முறைப்படி உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

அரசு சார்பில் திறக்கப்படும் இந்த மைதானத்தை, அனைவரும் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

“பாரம்பரிய விளையாட்டில் தொழில்நுட்பக் சிக்கல்களைத் தவிர்த்து, பழைய முறைப்படியே டோக்கன் வழங்க வேண்டும்”

செங்குட்டுவன், மாநிலத் தலைவர், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வர்ணனையாளர்கள் சங்கம்.

Leave A Reply

Your email address will not be published.