திருச்சியில் அம்மா பேரவை சார்பாக அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர் சீனிவாசன் பொது மக்களுக்கு வழங்கினர்.
திருச்சியில் அம்மா பேரவை சார்பாக அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர் சீனிவாசன் பொது மக்களுக்கு வழங்கினர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், திருச்சி வயலூர் மெயின் ரோடு சீனிவாசா நகர் அருகே, அதிமுக கழக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்துக் கூறும் விதமாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்து திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் கலந்து கொண்டு கழக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம்.ஆர்.ஆர் முஸ்தபா, கலைவாணன், ரோஜர், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, மற்றும் பேராசிரியர் தமிழரசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.