திருச்சி 9.03.2025
ஒருபோதும் திமுகவை திருச்சி மாவட்டத்தில் யாராலும் வீழ்த்த முடியாது -அமைச்சர் நேரு பேச்சு
திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து வாளடி சிவன் கோயில் அருகே கண்டன பொதுக்கூட்டம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் mps.சூர்யா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும்,நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
திருச்சி எப்போதும் திமுக வின் கோட்டை தான்.
சரியாக பணியாற்ற வில்லை என்றால் அதிமுக வின் மாவட்ட செயலாளர்களை மாற்ற வேண்டி இருக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். யாரை அதிமுகவின் மாவட்ட செயலாளராக போட்டாலும் திருச்சியில் வெற்றி பெறப்போவது திமுக தான் .
கலைஞர் காலத்திலும் சரி தற்போதைய முதலமைச்சர் காலத்திலும் சரி திருச்சி மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது திமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்காக 5000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் திமுக ஆட்சியில் செய்து கொண்டுள்ளோம்.
ஒருபோதும் திமுகவை திருச்சி மாவட்டத்தில் யாராலும் வீழ்த்த முடியாது.
இந்த ஆட்சி ஆரம்பித்த நாள் முதல் தொடர்ச்சியாக பெண்களுக்காகவே பெரும்பாலான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.
அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக பட்ஜெட்டில் இன்னும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அறிவிக்க உள்ளார்.
திமுக ஆட்சியின் நான்கு ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போட்டது திமுக ஆட்சியில் தான்.
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது இந்த ஆட்சிக்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் தொடர்ந்து திமுக ஆட்சி நடைபெற மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என பேசினார்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, லால்குடி மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]