Trending News Tamil News Website In Trichy

திருச்சி பஞ்சப்பூர் புதிய கலைஞர் பேருந்து நிலையத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி உள்ளனர் – அமைச்சர் நேரு பேச்சு*

0

திருச்சி 24.08.2025

*திருச்சி பஞ்சப்பூர் புதிய கலைஞர் பேருந்து நிலையத்தில் 1.8.25 முதல் 23.8.25 வரை 60,206 பேருந்து புறப்பாடுகள் நடந்துள்ளது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி உள்ளனர் – அமைச்சர் நேரு பேச்சு*

 

தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த புதிய கலைஞர் பேருந்து நிலையம் அமைத்துக் கொடுத்த கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேருக்கு திருச்சி YWCA வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த இந்த பாராட்டு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்

திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் பேருந்து நிலையம் 16.07.25 முதல் 31.07.25 வரை 41,896 பேருந்துகள் நாளொன்றுக்கு 1,19,489 பேர் வந்துள்ளார்கள்.

1.8.25 முதல் 23.8.25 வரை 60,206 பேருந்து புறப்பாடுகள் நடந்துள்ளது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.

பஞ்சப்பூர் பகுதியில் ஐடி பார்க் வர உள்ளது.

கொடிசியா போல் திருச்சியில் ஒரு அரங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே 150 ஏக்கரில் ஏரி உள்ளது அது சீரமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மற்ற ஏரிகளும் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று பள்ளி கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகள் படிப்பு முடிந்து வெளிநாடு சென்று விட்டு மீண்டும் திருச்சிக்கு வரும் பொழுது திருச்சியே ஒரு மாறுபட்ட முகமாக இருக்கும்.

எல்லா நகரங்களையும் விடவும் திருச்சி நகரம் சிறப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் கூறி தான் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கினார்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான மக்கள் பெருமைப்படக்கூடிய அளவிலான அனைத்து பணிகளும் நடைபெறுகிறது.

பாட்டு பாடி பெயர் வாங்கிய புலவர்கள் உண்டு சிலர் குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்குவார்கள் இங்கு பேசிய சிலரும் பேருந்து நிலையத்தில் இன்னும் சிலவற்றை செய்ய வேண்டும் என பேசினார்கள்.

நீங்கள் சொல்வதை செய்யக்கூடிய வாய்ப்பை பொதுமக்கள் எங்களுக்கு தந்துள்ளார்கள் அதனால் தான் நீங்களும் எங்களிடம் இதை செய்ய வேண்டும் என கூறுகின்றீர்கள்.

 

சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது சென்னையை போல் கோவை இருக்க வேண்டும் என நான் கேட்கவில்லை திருச்சியை போல் கோவை இருக்க வேண்டும் என பேசினார் அப்பொழுது முதல்வர் என்னை பார்த்து சிரித்தார்.

 

திமுக ஆட்சியில் திருச்சி மாநகரமே சுத்தமான மாநகரமாக இருந்து வருகிறது.

 

உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்காக 130 கோடி ரூபாய் செலவில் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் ஆற்றில் விடும் அந்த பணியும் நடைபெற்று வருகிறது.

 

இந்த விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன், தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு கவுன்சில் செயலாளர் புஷ்பவனம், டால்மியா சிமெண்ட் முன்னாள் நிர்வாக இயக்குனர் கோபாலகிருஷ்ணன், காவிரி கல்லூரி நீலகண்டன், மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வம் விஜயா ஜெயராஜ். கருணாநிதி கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் ,துர்கா தேவி கவுன்சிலர்கள் கலைச்செல்வி புஷ்பராஜ், பவுல்ராஜ், கமால் முஸ்தபா ராமதாஸ் , தனசேகர் வழக்கறிஞர் அந்தோணி தஸ்தகீர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.