Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து வழித்தடம்-அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்!

0

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து வழித்தடத்தை இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தை பார் பேரூராட்சியில் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து வேண்டும் என்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் கூத்தைபார் கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

கூத்தைப்பார் கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
மேலும் இந்த கோரிக்கையை ஏற்று இன்று காலை பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூத்தைப்பார் கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேருந்திலும் பயணம் செய்தார்.

துவாக்குடி நகர் கிளை நகர பேருந்து வழித்தடம்
மேலும் இந்த அரசு பேருந்து துவாக்குடி நகர் கிளை நகர பேருந்து வழித்தடத்தில் இருந்து அன்றாடம் காலை 7 .40 மணிக்கு துவாக்குடியில் இருந்து புறப்பட்டு திருவெறும்பூர் வழியாக கூத்தைபார் வந்தடைகிறது. மேலும் கூத்தைபார் வரும் பேருந்தானது 8:20 க்கு புறப்பட்டு கூத்தாப்பார் கிராமத்திலிருந்து திருவெறும்பூர் ,மார்க்கெட், பாலக்கரை வழியாக சத்திரம் நோக்கி செல்கிறது

Leave A Reply

Your email address will not be published.