Trending News Tamil News Website In Trichy

2-ம் ஆண்டின் நீட்சியில், 2026-ம் ஆண்டு ஆட்சியில்: த.வெ.க.வை ஆதரித்து மருது அழகுராஜ்

0

ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருக்கும் மருது அழகுராஜ் தற்போது ஓ.பி.எஸ். அணியில் இருக்கிறார்.

இதற்கிடையே, கடந்த சில நாளாக விஜயைப் புகழ்ந்து வரும் மருது அழகுராஜ் விரைவில் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில், ஒரு தலைமையும் ஒரு தலைமுறையும் அரசியலுக்கு வருகிறது. அதுதான் 2026ஐ தீர்மானிக்கப் போகிறது என விஜய் புகைப்படத்துடன் மருது அழகுராஜ் பகிர்ந்த  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், மருது அழகுராஜ் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், ‘தி.மு.க. இழந்து வரும் மக்கள் ஆதரவையும், அ.தி.மு.க. இழந்து வரும் தொண்டர்கள் அபிமானத்தையும் த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் மொத்தமாக அள்ளிக் கொண்டு போகப்போகிறது. 2ம் ஆண்டின் நீட்சியில், 2026-ம் ஆண்டு ஆட்சியில்’ என பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.