Trending News Tamil News Website In Trichy

என்னால் திமுகவிற்கு எந்த கெட்ட பெயரும் வராது-அமைச்சர் நேரு பரபரப்பு பேச்சு

0

திருச்சி..31.10.25

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் கழக முதன்மை செயலாளர் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது..

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு..

திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பணி
ஒன்றியசெயலாளர்களுக்கான பணி என்ன என்பதை அச்சிட்டு வழங்க உள்ளனர்
கிராமங்களில் 2002 வாக்காளர் பட்டியலையும், நகரங்களில் 2005 வாக்காளர் பட்டியலையும் நாம் கையில் வைத்துக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் போன்ற பணிகளை பார்க்க வேண்டும்.
வடமாநிலத்தைச் சேர்ந்த நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். மூன்று மாதங்களில் ஒரே இடத்தில் தங்கியிருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்க முடியும். அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபடுவார்கள்.
ஆனால் அவர்கள் இடம் மாறிக் கொண்டே இருப்பார்கள்
ஆகவே அவர்களை பட்டியலில் சேர்க்கக்கூடாது என அப்ஜெக்ஷன் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக
இஸ்லாமியர்கள் ஓட்டை தவிர்க்க பார்ப்பார்கள்.
அதில் ஒரு ஓட்டு கூட விட்டு விடாமல் பார்க்க வேண்டும் அது நம்முடைய கடமை நமக்கு யார் யாரெல்லாம் வாக்களிக்கிறார்களோ அவர்களை எல்லாம் தவிர்ப்பதற்கு தேர்தல் அலுவலர்கள் திட்டமிட்டால் தடுக்க வேண்டியது நமது கடமை.
100 200 வாக்காளர்களை மொத்தமாக சேர்த்தால் அதை நாம் தவிர்க்க வேண்டும்.
பெண்களுடைய வாக்குகள் ஒன்று கூட தவறாமல் இடம்பெற செய்ய வேண்டும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நம்முடன் வருவார்கள் என பழனிச்சாமி பேசிக்கொண்டே இருந்தார்.
ஆனால் எந்த கட்சியும் இங்கிருந்து செல்லவில்லை. ஆகவே திமுக கூட்டணி கூட்டணி வலுவாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த
பாமக இரண்டாக பிளந்து உள்ளது.
தேமுதிகளை நிலைப்பாடு தெளிவாகவில்லை.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் அது பொருந்தாத கூட்டணியாக உள்ளது. இது நமக்கு
மிகப்பெரிய சாதகம் அதை மேலும் சாதகமாக மாற்ற பார்க்க வேண்டும் என பேசினார்..

இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளர் மாநகர மேயர் அன்பழகன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி,
கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி,
பரணிகுமார், அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி, மாவட்ட பொருளாளர் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Leave A Reply

Your email address will not be published.