திருச்சி..8.03.25
இந்தி திணிப்பு – தொகுதி மறு சீரமைப்பில் அநீதி – தமிழகத்திற்கான போதிய நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி மாநகர திமுக இளைஞரணி சார்பில் திருவானைக்காவல் பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து பொறியாளர் அணி செயலாளர் கருணா, இளம் கழகப் பேச்சாளர் சேக் அலிமா அலி ஆகியோர் பேசினர்.
இந்தபொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு…
நாட்டு மக்களுக்காக எந்த ஒரு தியாகமும் செய்யாதவர்கள், நாட்டு மக்களுக்காக போராடாதவர்கள், பேசாதவர்கள் திடீரென்று ஒரு இயக்கத்தை தொடங்கி, நான் தான் அடுத்த முதலமைச்சர் என பேசி வருகின்றனர்.
மற்றொரு கட்சியோ மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தில் வெல்ல முடியவில்லை என்று, யார் யாரெல்லாம் உருவாக்கி பார்க்கிறார்கள்,
அதில் ஒருவர் தந்தை பெரியாரைப் பற்றி எல்லாம் தரக்குறைவாக பேசி வருகிறார்கள்.
நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென ஒரு இயக்கத்தை ஆரம்பித்து நான் தான் முதலமைச்சர் என்கிறார்.
சீமான் திடீரென பெரியாரைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார்.
தாய் மொழியை அழித்துவிட்டு ஹிந்தியை கொண்டு வருகிறார்கள். அந்த மொழியை படித்துவிட்டு அங்கும் வேலையில்லை, வேறு எங்கும் வேலையில்லை, அந்த மொழியில் நயமும் இல்லை, உதாரணமாக வடநாட்டுக்காரர்கள் கிட்டதட்ட ஒரு கோடி பேர் தமிழகத்தில் வந்து வேலை செய்கிறார்கள்.
தமிழ் மொழியை அழித்தால் தமிழர்களின் உணர்வை கெடுத்து விடலாம் என மத்திய அரசு நினைக்கிறது.
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காத கட்சி தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்றும்… இரு மொழிக் கொள்கைதான் தேவை என பேசினார்..
இந்த பொதுக் கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர மேயர் அன்பழகன், திருவானைக்கோவில் பகுதி கழகச் செயலாளர் கனகராஜ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.