Trending News Tamil News Website In Trichy

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சரிந்து விழுந்த மின் கோபுரம்-ஒரு மாத காலத்திற்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ உத்தரவு

0

திருச்சி

ஆற்று வெள்ளத்தில் சரிந்து விழுந்த அதி உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணி ஒரு மாத காலத்தில் நிறைவு பெறும்…

எம்எல்ஏ பழனியாண்டி உறுதி

திருச்சி பிராட்டியூர் துணை மின் நிலையம், லால்குடி அருகேயுள்ள தச்சங்குறிச்சி துணை மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து திருவானைக்காவல் துணை மின் நிலையத்தை இணைக்கும் வகையில், 1.10 லட்சம் மெகாவாட் மின்சாரம் செல்லும் கம்பிகளை இணைக்கும் 2 அதி உயர் மின்ன முத்த கோபுரங்கள் திருவானைக் காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம்- தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலம் இடையே ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட் டிருந்தன.

கடந்த

2024-ம் ஆண்டு ஆக.1-ம் தேதி நள்ளிரவு கொள்ளிடம் ஆற்றில் 5 லட்சம் கனஅடிதண்ணீர் திறக்கப் பட்டதால், 2 கோபுரங்களும் சரிந்து விழுந்தன.

இதனால், இந்த மின் பாதையால் பயன்பட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டாக மின் தட்டுப் பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, பிராட்டியூர், தச்சங்குறிச்சி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் மாற்றி, மாற்றி வழங்கப்பட்டது.

ஆனாலும், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், கம்பரசம் பேட்டை, சமயபுரம் டோல் கேட் பகுதிகளில் அடிக்கடி மின் வெட்டும், குறைந்த மின்னழுத்த பிரச்சினையும் ஏற்பட்டது.

இதனையடுத்து

கொள்ளிடம் ஆற்றில் அதி உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இதனை மின்தொடரமைப்பு கழக கண்காணிப்பு பொறியாளர் மேரி மேக்டெலின் பிரின்சி

நேரில் பார்வையிட்டார்.

பணிகளை விரைந்து முடிப்பது குறித்து

ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி

தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பணிகளை ஒரு மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினார்.

அதிகாரி பிரின்சி

கூறிய போது, “கொள்ளிடம் ஆற்றுக்குள் ரூ.2.84 கோடி மதிப்பில் அதிஉயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் 2 கோபுரங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

பேட்டியளித்த எம்எல்ஏ பழனியாண்டி

நேப்பியர் பாலத்தை காக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.

மீண்டும் அப்பகுதியில் தடுப்பு சுவர் கட்ட சட்ட சட்டமன்றத்தில் அமைச்சரிடம்

கோரிக்கை வைத்துள்ளேன்.

அமைச்சரும் தடுப்புச் சுவர் கட்ட உறுதி அளித்துள்ளார்.

மின் கோபுரங்கள் 25 மீட்டர் ஆழத்தில் இருந்து எழுப்பப்பட வேண்டும்.

தற்போது 20 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டுள்ளது.

மீதமுள்ள 5 மீட்டர் பாறையாக உள்ளது.

பாறையை உடைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திடம் கனரக இயந்திரங்கள் கோரியுள்ளோம் இயந்திரம் வந்தவுடன் உடனடியாக பணிகள் முழு வீச்சில் நடக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.