Trending News Tamil News Website In Trichy

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான்-யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் பாராட்டு

0

திருச்சி

*முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டுமென துவா செய்தோம்- தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான்- யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் பாராட்டு

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றானதும், இரக்கம், அன்பு, சகோதரத்துவத்தை உணர்த்தும் ரமலான் நோன்பை 30 நாட்கள் இஸ்லாமியர்கள் கடைபிடித்துவந்தனர். தமிழகத்தில் பிறை தென்படாத நிலையில் இன்று தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை ஹாஜியினால் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இஸ்லாமியர்கள் தங்களது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக் கொண்டாடிவருகின்றனர்.

ரமலான் பண்டிகையையொட்டி திருச்சி பாலக்கரை தவ்ஹீத் பள்ளிவாசல் திடலில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், மாநிலத் தலைவர் பீமநகர் ரஃபீக் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த கூட்டுத் தொழுகையில் ஆண்கள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று துவா செய்தனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க திராவிட மாடல் ஆட்சி தான் காரணம் எனவும் தெரிவித்தனர்

இந்த ரம்ஜான் தொழுகையின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியமக்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் கலந்துக்கொண்டனர். மேலும் தங்களது நண்பர்களும், உறவினர்களும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.