டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா-திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி 14.04.2025
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா-திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
சட்ட மேதை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி இந்தியா முழுவதும் உள்ள அவரின் திருஉருவ சிலை, திருவுருவப்படத்திற்கும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாலை அறிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்
அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலில் படி திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் திமுகவினர் மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்றிக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, உள்ளிட்ட பகுதி செயலாளர்கள்,மண்டல குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்..