நீட் உள்ளிட்ட தமிழர்களுக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற பாஜக அதிமுக கூட்டணி தான் காரணம் என திமுகவினர் துண்டு பிரசுரம் விநியோகம்
திருச்சி 19.04.2025
நீட் உள்ளிட்ட தமிழர்களுக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற பாஜக அதிமுக கூட்டணி தான் காரணம் என திமுகவினர் துண்டு பிரசுரம் விநியோகம்
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள காரணம் திமுக தான் எனக்கூறி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் இன்று நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை பூத்த காரணம் அதிமுக தான் எனவும் நீட் தேர்வு மட்டுமல்லாது 3 வேளாண் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டம், மின் கட்டண உயர்வுக்கு காரணமான உதை மின் திட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு மீது பாஜக அரசின் அனைத்து துரோகங்களுக்கும் துணை நின்று அவர்களுடன் கூட்டணி அமைத்திருந்த அதிமுக தான் காரணம் எனவும் மீண்டும் வஞ்சக பாஜக துரோக அதிமுக கூட்டணியிடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாப்போம் என வலியுறுத்தியும் #NEETதுரோகிADMK என வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில். பகுதி செயலாளர் மோகன்தாஸ் முன்னிலையில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே துண்டு பிரசவங்கள் விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. அருண் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன், பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட மகளீர் அணி அமைப்பாளர் கவிதா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் K.S. ஜெயேந்திரன்,
தகவல் தொழில்நுட்ப அணி மேற்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, மணிகண்டம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பிரிட்டோ, காஜாமலை பகுதி பிரசாத், பொன் நகர் பகுதி மணிகண்டன், மணப்பாறை ஒன்றியம் கார்த்தி மற்றும் ஒன்றிய, பகுதி, வட்ட, ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் கள் பலர் கலந்து கொண்டனர்.