திமுக மாநில மாநாடு -கவனத்தை ஈர்க்கும் பிரம்மாண்ட பேனர்
*திருச்சியில் திமுக மாநாடு- பிரம்மாண்ட பேனர்களால் கவனத்தை ஈர்க்கும் வழக்கறிஞர் மணிவண்ண பாரதி*

திருச்சி, சிறுகனூரில் மார்க் 8-ம் தேதி நடைபெறவுள்ள திமுகவின் மாநில மாநாட்டை முன்னிட்டு, திருச்சி நீதிமன்றம் எதிரே வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பேனர் திருச்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

திருச்சி மாவட்டக் கழகப் பிரதிநிதி வழக்கறிஞர் மணிவண்ண பாரதி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் கட்சித் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த பதாகைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கழக முதன்மைச் செயலாளர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, பெரம்பலூர் எம்பி அருண் நேரு, ஆகியோரை முன்னிலைப்படுத்தி, மாநாட்டின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றியுள்ளார்.

“ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!” என்ற முழக்கத்துடன், மாவட்டக் கழகத்தின் சார்பில் மிக நேர்த்தியாக இந்தப் பதாகைகளை அவர் வடிவமைத்துள்ளார்.
திருச்சி நீதிமன்றம் எதிரே வைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட பேனர் இப்போதிலிருந்து மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு ஒரு சிறந்த வரவேற்பு அரணாக அமைந்துள்ளது.