*திருச்சியில் ‘சைக்கிளிங் யோகிஸ்’ அதிரடி-குடியரசு தினத்தை முன்னிட்டு 3 நாள் பாரம்பரிய சைக்கிள் பேரணி
திருச்சி – 24.01.26
திருச்சியில் சுற்றுலாத்துறையுடன் இணைந்து குடியரசு தினத்தை முன்னிட்டு 3 நாள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சைக்கிளிங் யோகிஸ் கடந்த 16 ஆண்டுகளாக குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம். பாரம்பரிய இடங்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் சைக்கிள் மூலமாக பயணம் செய்து குடியரசு தினம் அன்று சைக்கிள் மூலம் சுற்றுலாவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் தமிழகத்தில் இதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். இன்று திருச்சியில் காவேரி கரையோர பகுதிகளில் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்ற நோக்கில் காவிரி நதிக்கரையை ஒட்டியுள்ள பாரம்பரிய சின்னங்கள், வரலாற்று இடங்களுக்கு சைக்கிள் மூலமாக செல்ல உள்ளோம். இன்று முதல் நாளாக திருவெள்ளரை, ஸ்ரீரங்கம் செல்கிறோம், நாளை காவிரி கரையை ஒட்டிய பகுதிகளான பூண்டி மாதா கோவில், கல்லணை ஆகிய இடங்களுக்கு செல்கின்றோம். நாளை மறுநாள் முக்கொம்பு பகுதியில் இந்நிகழ்ச்சி நிறைவடையும். இந்த ஆண்டு எங்களது சைக்கிள் பயணங்களை திருச்சியில் வைத்துள்ளோம். அதற்கு சுற்றுலாத்துறை மிகுந்த ஆதரவாக உள்ளது என்றனர். இந்த மூன்று நாள் பயணத்தில் 40 பேர் கைகளில் பயணம் செய்கிறோம் 10 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 40 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
