திருச்சி YMCA வளாகத்தில் சிறப்பு குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் – மேயர் அன்பழகன் பங்கேற்பு*
திருச்சி 9.12.2025

*திருச்சி YMCA வளாகத்தில் சிறப்பு குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் – மேயர் அன்பழகன் பங்கேற்பு*

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை வெகு விமர்சையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது வழக்கம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வாழ்ந்த புனிதர் இயேசுவின் பிறந்தநாளை உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் நாளாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள YMCA வளாகத்தில் சிறப்பு குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற சிறப்பு குழந்தைகள் பாடல்கள், பரதநாட்டியம், வெஸ்டர்ன் டான்ஸ் என நடனமாடி பார்வையாளர்களை வியக்க வைத்தனர். குறிப்பாக கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து வந்த சிறப்பு குழந்தை அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு குழந்தைகளுக்கான கிறிஸ்மஸ் பரிசுகளை மாநகராட்சி மேயர் அன்பழகன் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தலைவர் ராஜசேகரன், கௌரவ செயலாளர் நோபல் ரிச்சர்ட், செயலாளர் ஜோஷ்வா ரேக்ஸ், பொருளாளர் ஜாம் நிக்கோல்தாஸ்,துணைத் தலைவர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள் தாமஸ், ராஜா உள்ளிட்ட ஏராளமான பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.