Trending News Tamil News Website In Trichy

காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

0

திருச்சி

காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

திருச்சி மாவட்டம் கே கே நகர், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தன்னுடைய மனைவி அறிவு செல்வி பெயரில் கொட்டப்பட்டு அன்பில் நகரில் உள்ள 5920 சதுர அடி காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய திருச்சி மாநகராட்சி மண்டலம் 4 – ல் விண்ணப்பித்துள்ளார். அவருடைய விண்ணப்பித்தை பரிசீலனை செய்து அதற்கு வரி நிர்ணயம் செய்ய மண்டலம் 4 ல் பில் கலெக்டராக உள்ள செபாஸ்டின்(56) என்பவர் சீனிவாசனிடமிருந்து 12000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். 12000 ரூபாய் தர முடியாது என சீனிவாசன் கூறவே 10 ஆயிரம் ரூபாய் கண்டிப்பாக தந்தால் தான் வரி நிர்ணயம் செய்து தரப்படும் என கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் வழிகாட்டல் படி இன்று சீனிவாசன் மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த செபாஸ்டினுக்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் செபாஸ்டினை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவருடைய அறையில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 24 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து செபாஸ்டினை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் மாநகராட்சி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.