திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆரோக்கியமான குடல் மகிழ்ச்சியான வாழ்க்கை* என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நலத்துறை, விரிவாக நடவடிக்கைகள் துறை மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கான மையம் ஆகியவை இணைந்து நடத்திய *ஆரோக்கியமான குடல் மகிழ்ச்சியான வாழ்க்கை* என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவம் மற்றும் குடல் புற்றுநோய் தடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலத்துறையின் தலைவர் மற்றும் ஆங்கில துறை பேராசிரியர் டாக்டர் பிரேம்குமார் வரவேற்புரை வழங்கினார்.
இயற்பியல் துறை தலைவர் ரவி தாஸ் தலைமை உரையாற்றினார்
விரிவாக்க நடவடிக்கைகள் துறை மற்றும் தாவரவியல் துறையின் தலைவர் ஆனந்த் கியோன் வாழ்த்துரை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை குடல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எஸ் விஜய் ஆனந்த் கலந்துகொண்டு செரிமான ஆரோக்கியத்தை காப்பாற்றுவது , உடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பது எப்படி உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினார்
மேலும் இந்நிகழ்ச்சியில் ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.சுபாஷ் மேத்தா மற்றும் ஆய்வக மருத்துவர் நிபுணர் டாக்டர் கற்பகம் கிருபா ஆகியோர் கலந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.