கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்.
திருச்சி-11.04.25
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்.
ஒன்றிய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி உள்ளது.
ஏழை எளிய மக்கள் இதனால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருச்சி பி.எஸ்.என்.எல் தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் விலை உயர்த்தப்பட்டதால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளத்தை வெளிக்காட்டும் வகையில் கேஸ் சிலிண்டர் முன்பு ஒப்பாரி பாடல் பாடியும் தங்கள் எதிர்ப்பை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பதிவு செய்தனர்.
தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்தும், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாலபாரதி,
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் கேஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலையை ஒன்றிய பாஜக அரசு உயர்த்தி உள்ளார்கள். இது குடும்ப பெண்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தான்.
அதானி அம்பானி உள்ளிட்டோருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அவர்களுக்கு ஆதரவாகவே இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது. உடனடியாக இந்த விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்ம் எனவே இந்த விவகாரத்தில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.