சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க சார்பில் நடைபெற்ற மாபெரும் அன்னதானம்.
திருச்சி:
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க சார்பில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் சத்தியம் சி.சரவணன் தொடங்கி வைத்தார்
பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பாதையாத்திரையாகவும் சமயபுரம் மாரியம்மன் கோவில் வந்தனர்.
சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நான்காம் ஆண்டு மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது.
சமயபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த அன்னதானத்தை தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க நிறுவனரும், பொதுச் செயலாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சத்தியம் சி. சரவணன் தொடங்கி வைத்தார்.
சுமார் 5 ஆயிரம் பக்தர்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், பொங்கல் சுண்டல் தண்ணீர் பாட்டில் போன்றவை அன்னதானமாக வழங்கப்பட்டது.
அன்னதான விழாவுக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட தலைவர் வேலு, செயலாளர் நீலமேகம், பொருளாளர் பாலமுருகன், மாநில கவுரவ தலைவர் கணேசன், மாநில பொருளாளர் சசிகுமார், மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் முத்து.
நிர்வாகிகள் செல்வநாயகபுரம் ராஜேந்திரன், வெண்ணி வாய்க்கால் கார்திசன், ஆய்க்குடி சத்தியேந்திரன், பருக்கைக்குடி மாதவன், செல்வநாயகபுரம் முருகன், உடைய நாதபுரம் ராஜேந்திரன்.
பேராவூர் எம்.எஸ். முருகன், பூக்குளம் மாரிமுத்து, பேராவூர் எஸ்.முருகன் இதம்பாடல் தமிழ்ச்செல்வம், அக்ரமேசி ராமநாதன், பருத்திக் குளம் மாதவன், மோகனூர் பம்பரம் கணேசன்.
ஏர்வாடி சீனி, வெள்ளக்குளம் அங்குசாமி, வல்லக்குளம் பழனி, தேர்வழி கண்ணன், பூவளத்தூர் சரவணன், தஞ்சாவூர் மலைமேகு, செல்வநாயகபுரம் கிருஷ்ணமூர்த்தி.
துறையூர் சதீஷ்குமார், இதன்பாடல் லிங்கமூர்த்தி, முத்து, செல்வம், பட்டணம் காத்தான் வெங்கடேஷ், ஆயக்குடி சந்திரன், செல்வநாயகபுரம் முருகேசன்.
மத்திய மண்டல நிர்வாகிகள் பெரம்பலூர் செல்கருங்கு, புதுக்கோட்டை தர்மலிங்கம், தஞ்சாவூர் ராஜபாண்டி, கோவிந்தன், செல்வம், பிரபு, மாடசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.