திருச்சி கருமண்டபம் பகுதியில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி.. 17.04.25
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்…
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் திமுக பாகமுகவர்கள் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொன்நகர் பகுதி செயலாளர் மோகன் தாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பாக முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் வாட்ஸ் அப் சேனலில் இணைவதன் அவசியம் குறித்தும், சமூக வலைதளங்களில் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் திமுக மீதும் திமுக தலைவர்கள் மீதும் திமுக தலைமையிலான ஆட்சியின் மீதும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறுகளுக்கு உடனுக்குடன் பதிலடி தருவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.