சிறந்த பகுதி செயலாளர் என்ற விருதை தட்டிச்சென்ற திருச்சி திமுக கவுன்சிலர்- நாளை கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்குகிறார்.
திருச்சி 16.09.2025
சிறந்த பகுதி செயலாளர் என்ற விருதை தட்டிச்சென்ற திருச்சி திமுக கவுன்சிலர்- நாளை கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்குகிறார்.
கரூரில் செப்டம்பர் 17-ம் தேதி (நாளை) திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க ஸ்டாலின் விருது என பல்வேறு விருதுகள் நாளை வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் சிறந்த பகுதி செயலாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்படுகின்றன.
அதில் திருச்சி மாவட்டத்தில் சிறந்த பகுதி செயலாளராக திருச்சி ஆழ்வார்தோப்பு, தென்னூர், 29 வது வார்டு பகுதியை சேர்ந்த கவுன்சிலர் காமல் முஸ்தபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு நாளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் விருது வழங்கி பாராட்ட உள்ளார்.
இவர் திமுக வின் கொள்கையின் ஈர்ப்பால் 1990 -ம் ஆண்டு முதல் கழக உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். 2008-ம் ஆண்டு கழக இளைஞரணி செயலாளர் ஆனார், 2013 முதல் 2021 வரை வார்டு செயலாளராக செயல்பட்டார், இவரின் உண்மையான உழைப்பும் அர்ப்பணிப்பை கண்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு 1-2- 2022 ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி வேட்பாளராக இவரை அறிவித்தார் அதில் வெற்றியும் பெற்றார்.
இதனை தொடர்ந்து 20-8-2022 ஆம் ஆண்டு ஆழ்வார்தோப்பு பகுதி செயலாளராக அமைச்சர் கே என் நேரு இவரை அறிவித்தார். அன்று முதல் இன்று வரை ஓய்வில்லாமல் கட்சிக்காகவும், கவுன்சிலராக தன்னை தேர்ந்தெடுத்த ஆழ்வார்தோப்பு பகுதி மக்களுக்காகவும் சுறுசுறுப்பாகவும், துடிப்பு மிக்கவராகவும் இன்று வரை செயல்பட்டு வருகிறார்.
இவருக்கு சிறந்த பகுதி செயலாளருக்கான விருதை வழங்கும் கழகத் தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
உயிர் உள்ளவரை திமுகவிற்காக உண்மையாக உழைப்பேன் என தெரிவித்துள்ளார்.