*திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் – எம்.எல்.ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார்*
திருச்சி 2.09.2025
ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோப்பு ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பழனியாண்டி எம்.எல்.ஏ மனுவை பெற்று முகாமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் அந்தநல்லூர் ஒன்றிய துணைச் செயலாளர் மலர் அறிவரசன், கைக்குடி சாமி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் ராஜவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் திருச்சி லெட்சுமணன், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.