Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் வருவாய் துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்

0

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்

வருவாய் துறை ஊழியர்கள் பேரணி – தர்ணா போராட்டம்

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்

திருச்சி ஜூன் 25-

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் பேரணி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்தில் இருந்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை வந்தடைந்தனர்.பேரணியை மாவட்ட தலைவர் பால்பாண்டி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பிறகு அங்கு கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றி செல்வன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜம்புநாதன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அய்யனார், மகேஷ், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்ணா போராட்டத்தில் அந்தோணி தொடக்க உரையாற்றினார். மாநில தலைவர் சுடலையாண்டி சிறப்புரை ஆற்றினார். தர்ணா போராட்டத்தில் மாநில நிர்வாகிகள் செல்வராணி செந்தமிழ் செல்வன், நவநீதன், பெரியசாமி, செந்தில்குமார், அல்போன்சா, பாண்டீஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

போராட்டத்தில்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலி பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும். அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு அளித்திடும் வகையில் வருவாய் துறை அலுவலகம் மீது தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கிட சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்றிட வேண்டும்.அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.கிராம உதவியாளர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடங்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.இந்தப் போராட்டத்தில் ஏராளமான வருவாய்த்துறை அலுவலங்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட துணைத்தலைவர் சங்கர

நாராயணன் நிறைவுறையாற்றினார். முடிவில் மாவட்ட நிதி காப்பாளர் பொன் மாடசாமி நன்றி கூறினார்.திருச்சி மாவட்டத்தில் இன்று நடந்த போராட்டத்தில் 756 பேர்தற்காலிக விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.