Trending News Tamil News Website In Trichy

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தை முன்னிட்டு செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருச்சி வரகனேரி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.

0

திருச்சி – 25.05.2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தை முன்னிட்டு செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருச்சி வரகனேரி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அல்அமீன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில செயலாளர் கூறுகையில்…

வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் விசாரணையின் தீர்ப்பின் முடிவு இஸ்லாமியர்களுக்கு நியாயத்தின் அடிப்படையில் அமையும் என நம்புவதாகவும், வக்பு சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும் அமையும் என்றும், ஒருவேளை தீர்ப்பு எதிராக அமைந்தால் ஜனநாயகரீதியான உரிமைகளை பெறுவதற்கு தொடர் போராட்டம் நடத்துவோம். நீதித்துறையின் மூலமாகவும், மக்கள் மன்றத்தின் வாயிலாகவும் எங்களது கோரிக்கையை முன்வைப்போம், வக்பு சொத்துக்களை அபகரிக்க முயலும் பாஜக அரசின் திட்டத்தை முறியடிப்போம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல், மாநில அரசுகள் மத்திய அரசிடம் கையேந்தும்நிலையை ஏற்படுத்துவது சரியல்ல, மத்திய அரசின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.வக்பு திருத்தச்சட்டத்துக்கு எதிராக தீர்ப்பு வந்தால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் மக்கள்மன்றத்தில் கொண்டுசேர்ப்போம் என்றார்.

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது, தமிழகத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது, எனவே சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்திடவேண்டும்.தாமதமாகும் பட்சத்தில் குறைந்தபட்சம் ஐந்து சதவீத ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என திமுக அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் தீர்க்கப்படாத பட்சத்தில் திமுகவிற்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையை மக்கள் மத்தியில் உண்டாக்கும் என்றார்.

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டதால் கல்வியை இழந்துவிட்டனர், கல்வியின்மையால் பிற்போக்குத்தனத்திற்கு இங்குள்ள ஆட்சியாளர்களால் இஸ்லாமியர்கள் தள்ளப்பட்டுள்ளனர், எனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அங்கீகாரம் அளித்தால் அது திமுக ஆட்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

வக்பு வாரியம் மட்டுமல்ல எல்லா வாரியங்களிலும் ஊழல் மற்றும் முறைகேடுகள் உள்ளது. ஊழலை தடுத்து நிறுத்துவதற்கான செயலை செய்யாமல் வாரியத்தை இழுத்து மூடுவதற்கான வேலையை செய்யக்கூடாது. அந்த வகையில் வக்பு திருத்தச் சட்டம் என்பது நேரடியாகவே வக்பு வாரியத்தை இழுத்துமூடுவதற்கான செயல் என்றார்.

இந்து சமய அறநிலையத்துறையில் இந்துக்கள் அல்லாதோர் நிர்வாகிகளாக இருக்க முடியாது, ஆனால் வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பது இப்போக்குத்தனமானது, பாசிசத்தின் வெளிப்பாடு என்றார்.

இஸ்லாமியர் மற்றும் எளிய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் அவர்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுவது அவசியம் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்.

திமுக அரசியல் பல்வேறு குற்றங்கள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள், அவர்களுக்கு முன்னதாக எதுவும் நடக்காதது போல கூறுகிறார்கள். பாலியல் குற்றங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இடையேயான கொலைகள் மற்றும் குற்றசம்பவங்கள் தொடர்ந்து நடக்கும், அதனை தடுக்கவேண்டும், சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றங்கள் வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும், காவல்துறையும் லஞ்ச லாவணங்களுக்கு அப்பாற்பட்டு சிறப்பாக செயல்பட்டால் எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி குற்றங்கள் குறையும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.