ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு பேரடியாக உள்ளது – நவாஸ்கனி எம்.பி பேட்டி
திருச்சி-18.04.25
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு பேரடியாக உள்ளது – நவாஸ்கனி எம்.பி பேட்டி
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ப்பு திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திருச்சி பாலக்கரை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டார் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசை கண்டித்தும் வக்பு சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி,
வக்பு சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தான் உச்ச நீதிமன்றம் புதிய வக்ஃபு சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஒரு சில விவகாரங்களுக்கு தடை விதித்துள்ளது இது எங்களின் முதல் கட்ட வெற்றி. நிச்சயமாக இதில் முழுமையான வெற்றி பெறுவோம் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்யும் வரை தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெறும்.
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு பேரடியாக உள்ளது.
தொடர்ச்சியாக வக்பு சட்ட விவகாரத்திலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அவர்களுக்கு பேரடியாக உள்ளது அதனால் தான் அவர்கள் ஏதோ ஒன்றை பேசிக்கொண்டு உள்ளார்கள் நிச்சயமாக நாங்கள் சட்டரீதியாக போராடி வெற்றி பெறுவோம் என்றார்.