Trending News Tamil News Website In Trichy

ஆக்கிரமிப்பை யார் அகற்றுவது என வட்டாட்சியர் – ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இடையே போட்டி – பொதுமக்கள் பாதிப்பு

0

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா மொண்டிபட்டி கிராமம், வடுகப்பட்டி (கொட்டப்பட்டி) பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாவட்டம் மணப்பாறை மொண்டிப்பட்டி கிராமம் வடுகப்பட்டி பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

கடந்த 27.03.2025ம் தேதியில் மணப்பாறை வட்டாட்சியரிடம் மனு வாயிலாக ஒரு புகார் தெரிவிக்கப்பட்டது.

அந்த மனுவின் மீது வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறி மணப்பாறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு பரிந்துரை செய்துள்ளார்.

மணப்பாறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் — ஆக்கிரமிப்பை அகற்றும் பணியினை மணப்பாறை வட்டாட்சியர் தான் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி பதில் கடிதம் அளித்துள்ளார்.

தற்சமயம் இருவரும் மாறிமாறி பரிந்துரைத்து பணியை தாமதப்படுத்தி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.மேலும் இவ்வாக்கிரமிப்பால், இந்த வாரியில் இணைந்துள்ள வடுகப்பட்டியின் நான்கு வீதியில் உள்ள கழிவுநீர் வாய்காலில் நீர் செல்லாமல் நீர் தேங்கி கழிவு நீர் பச்சை நிறத்தில் உள்ளது.

300 விவசாயிகளின் நிலங்களுக்கு செல்லும் நீர் பாய்ச்சல் பாதிக்கப்படுவதுடன், 40 பட்டியல் இன சமுதாயமக்கள் வீடுகளும், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய கட்டிடம், சமுதாயக் கூடம், தகனம் செய்யும் மயாணம், கொட்டப்பட்டி – மறவனூர் செல்லும் தார்சாலை போன்றவை நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

எனவே நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தும் இடத்தை பார்வையை நேரில் பார்வையிட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நீர்நிலை இடங்களை பாதுகாத்தும் கழிவுநீர் வாய்க்கால் அடைப்பை அகற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பட்டியல் சமுதாய மக்களின் வீடுகளையும் பொதுமக்களையும் காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.