திருச்சிபாஜக பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது தமிழக பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்- காதர் மொய்தீன் பேட்டி
திருச்சி 25.03.2025
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக கல்லூரியின் அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் மைக்கில் வாழ்த்துரை வழங்கி இப்தார் நோன்பில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். கல்லூரியின் செயலர் அருள் முனைவர் அமல், கல்லூரி முதல்வர் முனைவர் மரியதாஸ், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பொருளாளர் ஹாஜி ஜமால் முகமது, கல்லூரி முதல்வர் முனைவர் ஜார்ஜ் அமல ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட அரசு ஹாஜி மவுலவி முப்தி முனைவர் ஜலில் சுல்தான்
கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி துவா செய்து இப்தார் விருந்தினை தொடங்கி வைத்தார். நிகழ்வில் கல்லூரியின் இணை முதல்வர் முனைவர் ராஜேந்திரன், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோசப் கல்லூரியின் உள்தர மதிப்பீட்டு குழுவின் உதவி புல முதன்மையர் முனைவர் குர்ஷித் பேகம் செய்திருந்தார்.
நிகழ்வில் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவ மாணவியர் மட்டுமல்லாது பல்வேறு மதங்களை சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..
திராவிட மாடல் ஆட்சி தமிழகத்திலிருந்து இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என செயலாற்றி வருகிறோம்.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளது. இருந்த போதும் வட மாநிலங்கள் ஒரு மொழியை பின்பற்றுகின்றன.
ராஜாஜி ஆரம்பத்தில் இந்தியை திணித்தார் ஆனால் பின்னாட்களில் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை அவரே புரிந்து கொண்டார்.
இரு மொழி கொள்கையில் தான் நான் படித்தேன். இருந்தபோதும் திருச்சியிலிருந்து நானே தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளை படித்துள்ளேன்.
தேவை என்றால் நாக் மொழிகளை எப்படி வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம்.
தமிழகத்தில் இரு மொழி கொள்கை வேரூன்றி உள்ளது. அதை தலைகீழாக நின்றாலும் மாற்ற முடியாது.
பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரித்த இரண்டு செய்தியாளர்கள் தாக்கப்பட்டது வன்மையான கண்டனத்திற்குரியது. பா.ஜ.க செய்துள்ள மிகப்பெரிய கொடுமை.
தமிழக பா.ஜ.க தலைவர்கள் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
தொகுதி மறுவரை குறித்து யாரும் யோசிக்காத ஒன்றை முதல்வர் யோசித்து உடனடியான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.
தொகுதி மறுவரை விவகாரத்தில் குழப்பமான நிலை உள்ளது. தொகுதி மறுவரையில் அநியாயமாக இருக்க கூடாது என பிரதமரை திமுக தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் சந்தித்து இது குறித்து வலியுறுத்துவார்கள் நிச்சயம் அந்த கோரிக்கை வெற்றி பெறும் என நம்புகிறேன்